நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!

கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!
Published on

இதையடுத்து அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில், மனுகுமரன் தயாரித்து இருக்கிறார்.

தமிழில், பாரிஸ் பாரிஸ், தெலுங்கில், தட்ஸ் மகாலட்சுமி, கன்னடத்தில், பட்டர் ப்ளை, மலையாளத்தில், ஜாம் ஜாம் என்று படத்துக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. தமிழ்-கன்னட படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

தமிழில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர், பலரின் கவனத்தை ஈர்த்து, யூ டியூப்பில் நம்பர்-1 ட்ரெண்டில் இருந்து வந்தது. தற்போது, இந்த டீசர் 7.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு உருவான நயன்தாராவின் கோல மாவு கோகிலா 6 மில்லியன் பார்வைகளை பெற்று, யூ டியூப்பில் சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த சாதனையை காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் பட டீசர் முறியடித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com