

சீனுராமசாமி அடுத்து டைரக்டு செய்யும் மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதியே கதாநாயகன். இதுவும் தர்மதுரையைப் போல் ஒரு மனிதனின் உயர்ந்த குணத்தை சித்தரிக்கும் படம்தான். விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். நட்சத்திர அந்தஸ்து உயர உயர அவருக்கு அன்பும், பணிவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த படத்தின் கதாநாயகி நடுத்தர வயது உடையவராக இருக்க வேண்டும். அனுஷ்காவிடம் கேட்கலாம் என்று இருக்கிறேன் என்கிறார், சீனுராமசாமி!