காதல் வதந்தி: எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - நடிகை அதிதி ராவ்

சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பங்கேற்கும் புகைப்படங்களும் வைரலானது.
காதல் வதந்தி: எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - நடிகை அதிதி ராவ்
Published on

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், சித்தார்த் உடனான காதல் வதந்திக்கு அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை, அது 'தேவையற்றவை' எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். தான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை, பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.

சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com