ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு லண்டனில் திருமணம்

ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கும் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி 6-ம் தேதி லண்டனில் திருமணம் நடக்கிறது.
ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு லண்டனில் திருமணம்
Published on

திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகா சேதுபதி, ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவை பிப்ரவரி 6-ம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொள்கிறார்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், திருமணம் லண்டனில் பதிவு செய்யப்படும். இருப்பினும், ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சினேகாவும் அன்மோல் ஷர்மாவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் அவர்களது பெற்றோர் கோருகின்றனர்.

லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சினேகா சட்டம் பயின்றார், மேலும், லண்டனிலேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சி படிப்பையும் படித்தார். இரட்டை எம்பிஏ படித்த அன்மோல் சர்மா, லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார். இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் தொழில் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com