

பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா சுலகுண்டே கிராமத்தை சேர்ந்தவர்கள் சூர்யா (வயது 19), மகேஷ் (20), குமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நெலமங்களாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
குலுவனஹள்ளி என்ற பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சூர்யா, மகேஷ் பரிதாபமாக இறந்தனர். குமார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.