“என் கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்..!”

புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ரகுல் பிரீத்சிங்.
“என் கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்..!”
Published on

ரகுல் பிரீத்சிங் தற்போது தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழ் பட உலகில் அவர் வளர்ந்து வரும் கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார். சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்படுவதை இவர் ஏற்கவில்லை. அதில் உண்மை இல்லை என்று இவர் கூறுகிறார்.

ரகுல் பிரீத்சிங்கிடம், அவருடைய திருமணம் பற்றியும், வருங்கால கணவர் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

திருமணம் பற்றி நான் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், வருங்கால கணவர் பற்றி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். நான், 5 அடி 9 அங்குலம் உயரம் இருக்கிறேன். எனக்கு வரப் போகிறவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும். அவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை விட உயரமாக இருக்க வேண்டும் என்கிறார், ரகுல் பிரீத்சிங்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com