இன்று தேசிய ஒற்றுமை தினம்

சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அவரது நினைவுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இன்று தேசிய ஒற்றுமை தினம்
Published on

இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒன்றிணைத்ததில் படேல் முக்கிய பங்காற்றினார். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அவரது நினைவுகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்படுகிறது. ஒற்றுமை அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பல்வேறு அமைப்புகளின் மூலம் ஒற்றுமைக்கான ஓட்டம், உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள், ரங்கோலி, கட்டுரை எழுதுதல், விவாதங்கள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நாள், நம் நாட்டின் வலிமையை நினைவூட்டுவதாகவும், நமது பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நமது நாட்டின் திறனை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கும் என உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

படேலின் நினைவாக குஜராத் மாநிலத்தில் நர்மதை நதிக்கரையில், 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com