ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 10 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: 10 பேர் கைது
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் விஷ்னோ சராய் பகுதியில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து எல்.ஈ.டி டிவி, 13 செல்போன்கள், மற்றும் ரூ.1.94 லட்ச ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com