

காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்கு பெட்டக முனையத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அந்த செம்மரக்கட்டைகள் சார்ஜாவுக்கு கடத்தப்பட உள்ளதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஆபரேஷன் ரக்த் சந்தன் என்ற பெயரில் களமிறங்கிய அதிகாரிகள், சரக்கு பெட்டகத்தை ஸ்கேன் செய்து சோதனையிட்டனர். இந்த சோதனையில் சுமார் 11.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14.63 மெட்ரிக் டன் எடை கொண்ட 840 செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை கடத்த முயன்றவர்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.