இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை 2,912 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவிலுள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரை கடந்த ஜனவரி 29ந்தேதி இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதேபோன்று உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் கேரள அரசு அதனை மாநில பேரிடர் என அறிவித்தது.

இதன்பின்பு தீவிர சிகிச்சைக்கு பின்னர் 3 பேருக்கும் பாதிப்பு குறைந்தது. சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். கேரள அரசும் மாநில பேரிடர் அறிவிப்பினை தளர்த்தியது.

இந்நிலையில், இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கும் என 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com