வருமான வரி கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய 2 ஆண்டு அவகாசம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய 2 ஆண்டு அவகாசம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த கணக்கை ஒரு முறை தாக்கல் செய்தபின்னர் அதில் தவறு இருந்தால் அதைத் திருத்துவதற்கான புதிய வழிமுறை குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

நமது நாடு விரைவாக வளர்ந்து வருகிறது. பொதுமக்கள் பல்வேறு நிதி பரிமாற்றங்களை செய்கிறார்கள். வரி செலுத்துவோர் பரிமாற்றங்களை தெரிவிக்க வசதியாக வலுவான கட்டமைப்பை வருமான வரித்துறை உருவாக்கி உள்ளது.

அந்த வகையில், வருமான வரி கணக்கு தாக்கலில் தவறுகள் செய்திருப்பதை வரி செலுத்துவோர் பின்னர் உணரலாம். அந்த தவறுகளை சரிசெய்து, புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை வரி செலுத்துவோர் அறிவித்து வரி செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

அந்த புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம். தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், வருமானத்தை தவற விட்டதாக வருமான வரி முறை கண்டறிந்தால் அது ஒரு நீண்ட செயல்முறையாக நீளும்.

ஆனால் புதிய திட்டத்தின்கீழ் வருமான வரிசெலுத்துவோர் மீது நம்பிக்கை வைக்கப்படும். இது கணக்கு தாக்கல் செய்வோர், தாங்கள் முதலில் தவற விட்ட வருமானத்தை அறிவிக்க உதவும், இந்த முன்மொழிவு பற்றிய முழு விவரங்கள் நிதி மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com