வீடு புகுந்து 3½ கிலோ நகைகள் திருட்டு

திலக்நகரில் வீடு புகுந்து 3½ கிலோ நகைகள் திருட்டு வீடியோ சம்பவம் வைரலானது.
வீடு புகுந்து 3½ கிலோ நகைகள் திருட்டு
Published on

திலக்நகர்:-

பெங்களூரு திலக்நகர் எஸ்.ஆர்.கே. கார்டன் பகுதியில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அவர்கள் ராமநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் அந்த வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். பின்னர் வீட்டில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதற்கிடையே ராமநகருக்கு சென்ற குடும்பத்தினர் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் வருவதும், அவர் வீட்டில் இருந்த பொருட்களை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் திலக்நகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வீட்டில் இருந்த 3 கிலோ தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரிந்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com