ஆசிட்டை தவறுதலாக மதுபானம் என நினைத்து குடித்த 3 பேர்...

திரிபுராவில் மதுபானம் என தவறுதலாக நினைத்து ஆசிட் குடித்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஆசிட்டை தவறுதலாக மதுபானம் என நினைத்து குடித்த 3 பேர்...
Published on

தலாய்,

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பாபிராம் ரியாங் (வயது 38). இவரது மனைவி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்பின் தனது மகனின் உடல்நிலை சரியில்லாததுபற்றி பாபிராமிடம் கூறியுள்ளார்.

உடனடியாக பாபிராம் அங்கு சென்றுள்ளார். இதன்பின் சம்பவத்தன்று இரவு 10 பேர் மது குடித்துள்ளனர். இதில், பாபிராமும் கலந்து கொண்டார். இந்நிலையில், குடிபோதையில் மது என நினைத்து 3 பேர் ஆசிட் குடித்துள்ளனர். அவர்கள் சச்சீந்திரா ரியாங் (வயது 22), ஆதிராம் ரியாங் (வயது 40) மற்றும் பாபிராம் ரியாங் (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ரத்னா கூறும்போது, ரப்பர் ஷீட்டுகளுக்காக வைத்திருந்த ஆசிட்டை தெரியாமல், மதுபானம் என தவறுதலாக நினைத்து 3 பேரும் குடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, நேற்று காலை 3 பேரும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com