

கோரக்பூர்,
கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஜிஸன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இச்சம்பவம் யோகி ஆதித்யாநாத் அரசு மீதான விமர்சனத்தையும் அதிகரிக்க செய்தது. இப்போது மீண்டும் அதே மருத்துவமனையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரையில் 58 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் இச்செய்தி உறுதியும் செய்யப்பட்டு உள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையில் 58 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 32 குழந்தைகள் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகள், 28 குழந்தைகள் ஒரு மாதத்திற்கு மேலான குழந்தைகள், என பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவராக பதவி வகிக்கும் விரிவுரையாளர் டாக்டர் ஸ்ரீவாஸ்தவ் கூறிஉள்ளார். சனிக்கிழமை மட்டும் 15 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். மருத்துவமனையில் 235 குழந்தைகள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒரு மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் உயிரிழப்பிற்கு ஊட்டச்சத்து இல்லாமையே காரணமாகும்.
250 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், அவர்களில் உயிரிழந்த 26 குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்திற்கு மேலானவர்கள், எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு ஸ்ரீவாஸ்தவ் பதிலளிக்கையில், குழந்தைகள் வசித்த பகுதியில் சரியான சுத்தமின்மையே காரணம் என கூறிஉள்ளார். அப்பகுதியில் சுத்தத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்து உள்ளார். சுத்தத்தை பராமரிக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நாங்கள் விழிப்புணர்வை பரப்ப நடவடிக்கையை எடுத்து வருகிறோம், எனவும் குறிப்பிட்டு உள்ளார். மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் 30 குழந்தைகள் உயிரிழப்பு என தலைப்பு செய்திகளாக வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
மருத்துவமனைகளில் பயனற்ற மருந்துகள் வழங்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர் எனவும் நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இப்போதும் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்து உள்ள சம்பவம் மீண்டும் யோகி ஆதித்யநாத் அரசை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து உள்ளது. கோரக்பூர் மருத்துவமனையில் இப்போதையை உயிரிழப்பிற்கும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.