இமாசல பிரதேசத்தில் 6க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் தெருவோர நாய்கள் கடித்ததில் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#HimachalPradesh
இமாசல பிரதேசத்தில் 6க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

சிம்லா,

உத்தர பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து இமாசல பிரதேசத்தின் சிர்மாவர் மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரது 7 வயது மகன் அருகிலுள்ள அமர்கோட் கிராமத்தில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளான்.

இந்த நிலையில், அவனது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் அங்கு வந்துள்ளனர். அங்கு சிறுவனை 6க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டு இருந்துள்ளன. அவனை மீட்க சென்றவர்களில் 3 பேருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறுவனுக்கு தலை, தொண்டை, கழுத்து மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் பல காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்து விட்டான்.

சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அமர்கோட் கிராம தலைவர் ராகேஷ் கூறும்பொழுது, கடந்த காலங்களில் மக்களை தெரு நாய்கள் தாக்குவது பற்றி மாவட்ட நிர்வாகத்தினரிடம் கூறினோம். ஆனால் புகார் மீது நடவடிக்கை எதுவுமில்லை என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தினால் கிராமத்தினர் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளனர்.

#HimachalPradesh #straydogs

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com