அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்...! 8 பேர் உயிரிழந்த நிலையில் 82 பேர் பாதிப்பு...

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆணடும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரை எடுக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் காரணமாக வடகிழக்கு மாநிலத்தில் குறைந்தது 40 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மறஅறும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com