ஆக்ராவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை - வெப்பக்காற்று பலூன் சவாரி தொடக்கம்

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் வெப்பக்காற்று பலூன் சவாரி சவாரி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை - வெப்பக்காற்று பலூன் சவாரி தொடக்கம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ளது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஆக்ராவில் மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், ஆக்ராவில் வெப்பக்காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன் சவாரி தெடங்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் பேக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் இந்த சேவை தெடங்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடிய வகையில் பலூன் வடிவமைக்கப்பட்டுள்ள பேதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 2 ஆயிரம் அடிக்குமேல் பலூன் பறக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை ராட்சத பலூனில் பயணித்து, இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம் என்றும், நபருக்கு சுமார் 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com