அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை: மந்திரி வீணா ஜார்ஜ்

அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

குரங்கு அம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் கால் பதித்து விட்டது.

கேரளாவில் 2 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது நபராக, அங்கு மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி கேரளா வந்த மலப்புரத்தை சேர்ந்த 35 வயது ஆணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மஞ்சேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது" என தெரிவித்தார்.

அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com