நாட்டில் சிலர் மட்டுமே பலனடையும் சிஸ்டம்: ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு

நாட்டில் 24 மணிநேரமும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என ராகுல் காந்தி கூறினார்.
நாட்டில் சிலர் மட்டுமே பலனடையும் சிஸ்டம்: ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
Published on

உதய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக, அவர் சத்தீஷ்காரின் சுர்குஜா மாவட்டத்தின் உதய்ப்பூர் பகுதிக்கு இன்று சென்றார்.

அப்போது அவர், ராம்கார் சவுக் பகுதியில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது, நாட்டில் வன்முறை நடக்கிறது. வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. ஏனெனில், நாட்டில் 24 மணிநேரமும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என கூறினார். அதனுடன், மக்களால் அதனை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அது ஒரு பழக்கம் போன்று ஆகிவிட்டது என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் நாட்டின் நிதியில் இருந்து எவ்வளவு பணம் நீங்கள் பெறுகிறீர்கள் என்று தினசரி 3 முறை உங்களிடம் நீங்களே ஒரு கேள்வியை கேட்டு கொள்ள வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் உழைத்த பின்னர், நாளின் இறுதியில் உங்களுக்கு என்ன திரும்ப கிடைக்கிறது? என பாருங்கள். நாம், ஒரு சமூக விதிமுறையால் (சிஸ்டம்) கைவிடப்பட்டு இருக்கிறோம் என்றும் அதன் தலைவராக பிரதமரே இருப்பார் என்பதும் 10 நாட்களில் உங்களுக்கு தெரிய வரும்.

அந்த சிஸ்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பொது பிரிவை சேர்ந்த ஏழைகள் அடங்கிய 73 சதவீத மக்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

அதனால், 100 முதல் 200 பேர்... 1,000 முதல் 2,000 பேர் பலனடைந்து வருகின்றனர். மற்றவர்கள் அதனை பார்த்து கொண்டிருக்கின்றனர். பசியால் உயிரிழந்தும், ஜி.எஸ்.டி. வரியை செலுத்தி கொண்டும் இருக்கின்றனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com