

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில், உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க, மாநில அரசு தீர்மானித்து இருக்கிறது.
இதுதொடர்பான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என்று மாநில கால்நடை அபிவிருத்தித்துறை கழக நிர்வாக இயக்குனர் சமித் சர்மா தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஆந்திர மாநில அரசும் இதைப்போல் ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மத்தியபிரதேச அரசும் உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத வேலை வாய்ப்பை ஒதுக்க முடிவு செய்து இருக்கிறது என்றார்.