கைலாசா நாட்டின் புதிய பிரதமர் ஆகிறார் நடிகை ரஞ்சிதா: இணையத்தில் வைரலாக பரவுகிறது

சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
கைலாசா நாட்டின் புதிய பிரதமர் ஆகிறார் நடிகை ரஞ்சிதா: இணையத்தில் வைரலாக பரவுகிறது
Published on

Actress Ranjitha becomes the new prime minister of Kailash: goes viralபுதுடெல்லி,

கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த அவர் வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாக கூறி அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இதற்கிடையே சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அவர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மேலும் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி என கேள்விகள் எழுந்தது. இதற்கு ஐ.நா.செய்தி தொடர்பாளர்கள் அளித்த விளக்கத்தில், அவர்களின் பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என அறிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com