நடிகை சப்தமி கவுடா, துர்கா பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம்

காந்தாரா படத்தின் கதாநாயகி நடிகை சப்தமி கவுடா, மங்களூரு துர்கா பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை சப்தமி கவுடா, துர்கா பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம்
Published on

மங்களூரு:-

நடிகை சப்தமி கவுடா

கன்னட திரைஉலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'காந்தாரா'. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது. இதனால் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் சப்தமி கவுடா. இவர் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துளுநாட்டு தெய்வம்

'காந்தாரா' படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அந்த படத்தின் வெற்றி என்னை பெருமைப்படுத்தி உள்ளது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. துளுநாட்டின் தெய்வம் பற்றி எனக்கு முன்பு தெரியாது. காந்தாரா படத்திற்கு பிறகுதான் நான் அதைப்பற்றி தெரிந்து கொண்டேன். இனிமேல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் மீண்டும் எனது நடிப்பில் திரைப்படங்கள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

சாமி தரிசனம்

பின்னர் அவர் ஜெப்பு பகுதியில் உள்ள கொரஜே கோவில், கல்லாப்பு அருகே உள்ள பர்துகோலி என்ற குலிகா கோவில், துளு தேச தெய்வங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவருடைய தாய் சாந்தி, நடிகர் சுனில் மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com