விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி

விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி
Published on

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ 864 என்ற விமானம் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார்.

விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூற ஏர் இந்தியா செய்தி தொடர்பாளரை உடனடியாக அணுக முடியவில்லை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com