எனது அலுவலக இல்ல பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு; அச்சம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

எனது அலுவலக இல்ல பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அச்சம் தெரிவித்து உள்ளார்.
எனது அலுவலக இல்ல பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு; அச்சம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தினமும் புதிய உச்சம் அடைந்து வருகிறது. கொரோனாவின் புதிய அலையால் கடந்த ஒரு வாரத்தில், நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது.

கொரோனா தொற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 44 பணியாளர்களுக்கு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற அறைகள் உள்பட நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியே வழக்கு விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இருப்பவர் நீதிபதி எம்.ஆர். ஷா. இந்த நிலையில், சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று பேசிய நீதிபதி ஷா, எனது அலுவலக இல்லத்தில் பணியாற்ற கூடிய பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

இதன்பின்னர், மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் கூட்டம் கூடியதும், நீதிபதி ஷாவிடம் அவரது இல்லத்தில் இருப்பவர்களின் நலம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதி ஷா, கடவுளின் கருணையால் நான் நலமுடன் உள்ளேன். நான் நல்ல முறையில் இருக்கிறேன். நிலைமை அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து, நீதிபதி சந்திரசூட் பிற விவகாரங்களுக்கான விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். நீதிபதி ஷா தனது வீட்டில் நிலைமையை சரி செய்வதில் கவனம் செலுத்தும் சூழலில், இன்று ஒரு வழக்கு மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com