அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரபல மருந்து நிறுவனமான சிப்லா இறக்குமதி செய்கிறது.
அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி
Published on

புதுடெல்லி

சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரொனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும். மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95 சதவீதம் பேருக்கு பலனளித்துள்ளது.

மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளி இருக்க வேண்டும்.

மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com