

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், மாநிலத்தில் முழு ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அலுவலகங்கள் பணியாளாகளின் எண்ணிக்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமாப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மராட்டியத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.