புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. 57 மந்திரிகளை கொண்ட புதிய கூட்டணி மந்திரிசபைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கீழ் காணலாம்.

உள்துறை - அமித்ஷா

நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்

சாலை போக்குவரத்து- நிதின்கட்காரி

பாதுகாப்புத்துறை - ராஜ்நாத்சிங்,

வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்.

சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை- ரவிசங்கர் பிரசாத்.

ரயில்வே வர்த்தகம்- பியூஸ் கோயல்.

பெட்ரோலிய துறை- தர்மேந்திர பிரதான்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை -ஸ்மிருதி இரானி.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு- நரேந்திரசிங் தோமர் .

உணவு பதப்படுத்துவதல்-ஹர்சிமரத் கவுர் பாதல்.

சுகாதாரத்துறை: டாக்டர் ஹர்ஷ் வர்தன் .

நுகர்வோர் நலன் - ராம்விலாஸ் பாஸ்வான்

பழங்குடியின நலத்துறை அமைச்சகம் - அர்ஜூன் முண்டா

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com