குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜமா மசூதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜமா மசூதிக்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜமா மசூதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் பல நகரங்களில் கடந்த 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் பலியாகினர்.

கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்த நிலையில் டெல்லியில் இன்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

நாட்டின் பல பகுதிகளில் வெடித்த வன்முறை ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை மசூதிகளுக்கு தொழுகைக்கு பெரும் கூட்டம் வரும் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜமா மசூதிக்கு இன்று தொழுகைக்கு வந்தவர்கள் பேனர்களை ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அல்கா லாம்பாவும் கலந்து கொண்டார்.

டெல்லியின் ஜார்பாக் பகுதியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை விடுவிக்கக் கோரி பீம் ஆர்மி கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, ஆகஸ்ட் கிரந்தி மைதானத்திலிருந்து கிர்கான் வரை அணிவகுத்துச் செல்ல பாஜகவுக்கு மும்பை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com