இந்தியா-அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகளா? காங்கிரஸ் கேள்வி


இந்தியா-அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகளா? காங்கிரஸ் கேள்வி
x

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று டிரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வர்த்தக தடைகளை தகர்க்க பேச்சு வார்த்தைக்கு தயார் என இறங்கி வந்த டிரம்பின் விருப்பத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். ‘அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவோம்’ என அவர் டிரம்புக்கு பதில் அளித்தார்.

இந்தநிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று டிரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது கேள்வி இதுதான். வர்த்தகத்தை பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் கொண்டு வந்ததாக 35 தடவை டிரம்ப் சொல்லும் அளவுக்கு இயற்கையான கூட்டாளிகளா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story