

புதுடெல்லி
எல்லைக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவிரவாத முகாம்களிலிருந்து நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை வரவேற்று வரிசையாக அவர்களை சவக்குழிக்குள் அனுப்ப தயாராகவுள்ளது என்று ராவத் கூறினார்.
தேவை என்றால் எங்களது செய்தியின்படி நடந்து கொள்வோம் என்றார் ராவத்.
இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் (சிறிதும் அச்சமற்ற இந்தியர்கள்) எனும் தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 28-29 தேதிகளின் நள்ளிரவில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று சில தீவிரவாத முகாம்களை அழித்தது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எல்லைத்தாண்டிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.