

புதுடெல்லி,
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி களமிறங்க உள்ளது. இதற்காக, அக்கட்சி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
இந்த தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோனாவில் இருந்து குணமடைந்து, மீண்டும் உங்கள் சேவைக்கு வந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.