டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து துப்பாக்கி சூடு, கார் மீது முட்டைகள் வீச்சு

டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து துப்பாக்கி சூடு, கார் மீது முட்டைகள் வீச்சு
Published on

நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர் பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா. நேற்று வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கிழக்கு டெல்லியின் அசோக் நகர் பகுதியில் அவருடைய கார் சென்ற போது பைக்கில் வந்த மர்மநபர்கள் வழிமறித்துள்ளனர். காரில் முன் நின்ற அவர்கள் மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒரு குண்டு மிதாலியின் வலது கையில் பாய்ந்துள்ளது. அவருடைய காரின் மீது முட்டைகளும் வீசப்பட்டுள்ளது. உடனடியாக மதாலி அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மிதாலி தன்னுடைய கணவருடன் மோதல் இருந்ததாக கூறியுள்ளார். எனவே தனிப்பட்ட விரோதமாக இருக்கலாமா என போலீஸ் விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com