தீபாவளி கிப்ட் பார்சல் வெடித்து 2 சிறுமிகள் படுகாயம்

தீபாவளி அன்பளிப்பு பார்சல் பேட்டரி குண்டாக வெடித்ததில் 2 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.
தீபாவளி கிப்ட் பார்சல் வெடித்து 2 சிறுமிகள் படுகாயம்
Published on

மீரட்,

உத்தரபிரதேசம் மீரட் அருகில் உள்ள பிலானோ கிராமத்தை சேர்ந்தவர் மெஹாகர் சிங். இவர் மீரட்டில் உள்ள ஒரு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரது மகள்கள் நிதி (வயது 13) ராதிகா (வயது 11).

சிறுமிகள் 2 பேரும் அவர்களது வீட்டின் முன் கலர் பேப்பர்களால் சுற்றப்பட்ட தீபாவளி பரிசு பார்சலை கண்டு உள்ளனர். உடனடியாக சிறுமிகள் அதனை வீட்டிற்குள் எடுத்து சென்று பிரித்து பார்த்தனர். அப்போது திடீர் என பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 2 சிறுமிகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சிறுமிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமிகளுக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,

இந்த சம்பவம் குறித்து முதலில் புகார் அளிக்கப்படவில்லை . சிறுமிகளின் நிலை மோசமடைந்த பின்னர்தான் குடும்பத்தினர் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.

தடயவியல் குழு விசாரணையில் பார்சலில் இரண்டு மொபைல் பேட்டரிகள், ஒரு செப்பு கம்பி இருப்பதாகவும், மண்ணெண்ணெய் வாசனை இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலதிக விசாரணைக்கு பொருட்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என கூறினார்.

முதல் கட்ட விசாரணையில் இது ஒரு உள்ளூர் குற்றவாளியின் வேலை என்றும் இதில் சிறுமிகளின் தாயின் பங்கு சந்தேகத்திற்குரியது என தெரியவந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com