

அந்தவகையில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனமும் பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைல்கல் சாதனையில் பங்களிப்பு செய்ததற்காக பாரத் பயோடெக் பெருமை அடைகிறது. இது அரசு, தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து குடிமக்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இது தற்சார்பு இந்தியாவின் உண்மையான வெற்றிக் கதையாக அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.