அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த விண்ணப்பம்

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசியை, இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த விண்ணப்பம்
Published on

இதில் பெரிய அளவில் பக்க விளைவு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. லேசான, மிதமான பக்க விளைவு ஏற்படுகிறபோது அவை 24 மணி நேரத்தில் சரி செய்யக்கூடியதாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த தடுப்பூசியை அமெரிக்காவில் குழந்தைகளுக்கு செலுத்த அவசர பயன்பாட்டு அனுமதி கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டாளியாக உள்ள ஆகுஜென் விண்ணப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com