

புது டெல்லி,
மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர், முன்னாள் நிதி அமைச்சர், பொருளாதார நிபுணர், முன்னாள் பிரதமர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் தனது 87-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவரது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.