‘கெஜ்ரிவால் பயங்கரவாதி’ என பா.ஜனதா எம்.பி. தாக்கு: சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது

கெஜ்ரிவால் பயங்கரவாதி என பா.ஜனதா எம்.பி. தாக்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
‘கெஜ்ரிவால் பயங்கரவாதி’ என பா.ஜனதா எம்.பி. தாக்கு: சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது
Published on

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் அனல் வீசுகிறது. முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மேற்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதுபோல கெஜ்ரிவால் சேதப்படுத்துகிறார் என கூறினார். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதற்கு கெஜ்ரிவால் வேதனை தெரிவித்து டுவிட்டரில் உடனே ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், டெல்லி மக்களுக்காக 5 ஆண்டுகள் இரவும் பகலும் கடினமாக உழைத்தேன். எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தேன். அரசியலில் சேர்ந்த பின்னர் மக்களின் வாழ்க்கை மேம்பட பல சிரமங்களை எதிர்கொண்டேன். இன்று பதிலுக்கு பாரதீய ஜனதா என்னை பயங்கரவாதி என்று அழைக்கிறது. இது மிகவும் வலிக்கிறது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com