பாஜக வங்கக்கடலில் வீசப்படவேண்டும்; தெலுங்கானா முதல்-மந்திரி பேச்சு

மத்தியில் இருந்து நீக்கி பாஜக வங்கக்கடலில் வீசப்பட வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெரிவித்தார்.
பாஜக வங்கக்கடலில் வீசப்படவேண்டும்; தெலுங்கானா முதல்-மந்திரி பேச்சு
Published on

ஐதராபாத்,

நாட்டின் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் நடத்தர மக்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கபடவில்லை என மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது, மத்தியில் இருந்து (மத்திய அரசு) நீக்கப்பட்டு பாஜக வங்கக்கடலில் தூக்கி வீசப்படவேண்டும். நாட்டிற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கமாட்டோம். நமது பிரதமர் கிட்டப்பார்வை கொண்டவர்.

நாட்டின் ஆளுமையில் மாற்றம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக நான் மும்பை சென்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். நாம் நமது அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி எழுத வேண்டும். புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com