உ.பி. இடைத்தேர்தல்: பாஜக அனல் பறக்கும் பிரசாரம் - 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு!

உ.பி. முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மறைவைத் தொடர்ந்து மெயின்பூரி தொகுதி காலியானது.
உ.பி. இடைத்தேர்தல்: பாஜக அனல் பறக்கும் பிரசாரம் - 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு!
Published on

லக்னோ,

பாஜக ஆட்சி நடைபெற்றும் வரும் உ.பி.யில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி மெயின்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உ.பி. முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மறைவைத் தொடர்ந்து மெயின்பூரி நாடாளுமன்ற தொகுதி காலியானது.அத்துடன் கட்டௌலி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக பாஜக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரிஜேஷ் பதக் ஆகியோர் அடங்கிய 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com