

ஐதராபாத்,
ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.
இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ராஜ முந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்தார்.
இந்த விபத்து பற்றி உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.