

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சாய்கண்ட் கிராமத்தில் அரசு படைகள் தீவிரவாத தேடுதல் பணியில் இன்று ஈடுபட்டனர். அவர்களை நோக்கி பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து படையினருக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் குவாலம்போரா கிராம சிறுவனான ஷகீர் அகமது மீர் (வயது 17) காயம் அடைந்துள்ளான். அவனுடன் காயமடைந்த ஒடூ கிராமத்தின் மற்ற 2 சிறுமிகளும் உடனடியாக புல்வாமா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஷகீர் உயிரிழந்து விட்டான். சுமி ஜன் மற்றும் சப்ரீனா ஆகிய 2 சிறுமிகளும் ஸ்ரீநகருக்கு சிறப்பு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
புரளி பரவாமல் இருப்பதற்காக சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இன்டெர்நெட் சேவை முடக்கப்பட்டு உள்ளது.
#Kashmir #terrorists