தீபாவளி பரிசாக கார்... ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய உரிமையாளர்

நாங்கள் ஏற்கனவே 12 நட்சத்திர பிரபலங்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கிறோம் என கூறினார்.
தீபாவளி பரிசாக கார்... ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய உரிமையாளர்
Published on

பஞ்சகுலா,

அரியானாவில் பஞ்சகுலா நகரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்களுக்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்களை வழங்கி அதன் உரிமையாளர் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

நிறுவனத்திற்காக கடின உழைப்பு, விடாமுயற்சி, விசுவாசம் உள்ளிட்டவற்றுக்காக 12 ஊழியர்களுக்கு இந்த பரிசை அவர் வழங்கியுள்ளார்.

இதுபற்றி நிறுவன உரிமையாளர் மற்றும் இயக்குநரான எம்.கே. பாட்டியா கூறும்போது, ஊழியர்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் நம்பக தன்மை ஆகியவற்றுக்கான பரிசு இந்த கார். ஏற்கனவே நாங்கள் 12 நட்சத்திர பிரபலங்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கிறோம். விரைவில் 38 நட்சத்திரங்களுக்கு கார்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அவர், நிறுவன பணியாளர்களை ஊழியர்கள் என கூறாமல், பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com