மணல் கொள்ளை கும்பலின் 13 டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய காட்சி! ஊழியர்கள் அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் தடுப்பை இடித்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
மணல் கொள்ளை கும்பலின் 13 டிராக்டர்கள் சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய காட்சி! ஊழியர்கள் அதிர்ச்சி!
Published on

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நிர்வாகத்தையும், காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் தடுப்பை இடித்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த மணல் கொள்ளை மாபியாவுக்கு சொந்தமான 13 மணல் ஏற்றிய டிராக்டர்கள் ஆக்ராவில் உள்ள சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றன.

ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி தொழிலாளர்கள் முதலாவதாக சென்ற டிராக்டர் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆக்ராவில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று அதிகாலை 5 மணியளவில், அதிவேகமாக மணல் ஏற்றிக் கொண்டு டிராக்டர்கள் வந்தன. அவற்றை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்த முயன்ற போது, நிற்காமல் வேகமாக சென்ற டிராக்டர்கள், தடுப்பை இடித்துவிட்டு சென்றன. அடுத்தடுத்து 53 நொடிகளில் 13 டிராக்டர்கள் மணலை கடத்திக் கொண்டு, நிற்காமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக மணல் திருடி சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com