காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது

காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 25-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
Published on

புதுடெல்லி,

தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தஞ்சை கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட 4 மாநில பிரதிநிதிகளும், தங்கள் மாநிலத்துக்குரிய காவிரி நீரின் பங்கு குறித்த புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர். பின்னர் அது தொடர்பாக அவர்களுக்குள் கலந்துரையாடல் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com