சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் தொடர்பான விவகாரம்: லஞ்ச குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி மறுப்பு

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் தொடர்பான விவகாரத்தில், லஞ்ச குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் தொடர்பான விவகாரம்: லஞ்ச குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி மறுப்பு
Published on

புதுடெல்லி,

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை விசாரித்து வந்த சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே.சின்கா. இவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இறைச்சி வியாபாரி மொயின் குரேஷியை சி.பி.ஐ.யிடம் இருந்து விடுவிக்க ஐதராபாத் தொழில் அதிபர் சதீஷ் சனாவிடம் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மத்திய மந்திரி சவுத்ரி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

இது முற்றிலும் பொய்யான, அடிப்படையற்ற குற்றசாட்டு. சதீஷ் சனாவை எனக்கு தெரியாது. அவரை பார்த்ததும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டில் இப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகம் மூலம் அறிந்தேன். எனது நற்பெயரை சீர்குலைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். சட்டம் தனது கடமையை செய்யட்டும். நான் குற்றவாளி என்று நிரூபணமானால், அரசியலை விட்டு விலக தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com