விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை

விடைத்தாள் திருத்தும் பணியில் நடந்த குளறுபடியால் 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையிலும் 14 ஆசிரியர்கள் சிக்கினர்
விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரியர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத பல மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீட்டு பணி, கடந்த 1ந் தேதி தொடங்கியது.

அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் நிறைய ஆசிரியர்கள் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதிப்பெண் கூட்டலில் பலர் தவறு செய்துள்ளனர். இதனால், சில மாணவர்கள், மறுமதிப்பீட்டில் 55 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றிருந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும், விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த 130 ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் சென்னையில் 14 ஆசிரியர்களும், திருவனந்தபுரத்தில் ஒருவரும் அடங்குவர். பாட்னாவில்தான் அதிக அளவாக 45 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com