மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் சாலை பாதுகாப்பிற்கு பெண் கமாண்டோக்கள்!

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் சாலை பாதுகாப்பில் பெண் கமாண்டோக்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். #Chhattisgarh #Maoist
மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் சாலை பாதுகாப்பிற்கு பெண் கமாண்டோக்கள்!
Published on

ராய்பூர்,

கடந்த ஏப்ரல் மாதம் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழந்த தெற்கு சுக்மாவில் சாலை பாதுகாப்பு பணியில் சமீபத்தில் 60 பெண் போலீசாரை அம்மாநில போலீஸ் பாதுகாப்பு பணியில் அமர்த்தி உள்ளது. சுக்மா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா பேசுகையில், பெண் கமாண்டர்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுடன் மோத விரும்புகிறார்கள், ஆதலால் அவர்களுக்கு 70 நாட்கள் சுக்மா பகுதியில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்போது சாலை பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்,என கூறிஉள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து சரண் அடைந்தவர்கள் மற்றும் வழக்கமான முறையில் பணிக்கு எடுக்கப்பட்டவர்கள் இந்த கமாண்டோ படையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கமாண்டோ படையினர் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.

மிகவும் பயங்கரமான பகுதியாக அடையாளம் காணப்படும் தெற்கு சுக்மா பகுதியில் இந்த கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்கிறார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் நடந்துவரும் 56 கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். இப்பகுதியில் 13 மத்திய ரிசர்வ் படை முகாம்களும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com