ஆளுநர் மாளிகையில் பாரதியார் மண்டபத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார்
ஆளுநர் மாளிகையில் பாரதியார் மண்டபத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
Published on

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மண்டபத்தையும் மகாகவி பாரதியார் உருவப் படத்தையும் திறந்து வைத்தார்.

இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com