தலீபான்களை ஆதரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

தலீபான்களை ஆதரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தலீபான்களை ஆதரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ,

லக்னோவில் நடைபெற்ற சமூக மாநாட்டில் (சமாஜிக் பிரதிநிதி சம்மேளம்) பேசிய உத்திரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 2500 ஆண்டுகள் பழமையான கவுதம புத்தரின் சிலையை தலீபான்கள் அழித்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தலீபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை இந்த உலகமே பார்த்தது. ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் ஆன்மாவைப் புண்படுத்த விரும்பினர், ஆனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை மறந்துவிட்டனர். இதன் விளைவாக எதிர்வினை ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதே தலீபான்களை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. கவுதம புத்தர் சிலையை உடைத்ததற்காக கடவுள் அவர்களை தண்டிக்கிறார் என்று நாங்கள் கூறியிருந்தோம். இன்றும் நம் நாட்டில் தலீபான்களுக்கு ஆதரவாக பலர் உள்ளனர். தலீபான்களை ஆதரிப்பது என்பது பெண்களை அவமதிப்பது, புத்தரை அவமதிப்பது போன்றதாகும். அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புத்தர் ஒருபோதும் உலகத்தின் மீது போரைத் திணிக்கவில்லை, அவர் எப்போதும் மனிதகுலத்தின் உத்வேகத்தின் ஆதாரமாகவும் பக்தியின் மையமாகவும் இருந்தார். ஆனால் உலகில் எங்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் எந்தவொரு இந்தியரும் அல்லது எவரும் புத்தரின் சிலை, தலீபான்களால் அழித்த காட்சிகளை மறந்துவிடக்கூடாது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com