நடுவானில் பறந்த விமானத்தில் குழந்தைக்கு மாரடைப்பு - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த இருதய பிரச்சினை உள்ள 14 மாத குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மும்பை,

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் இருதய பிரச்சினை உள்ள 14 மாத குழந்தையும் பயணம் செய்தது. திடீரென அந்த குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் அந்த குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியது. இதனால் குழந்தையின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

உடனடியாக விமானத்தில் பயணம் செய்த டாக்டர்கள் சிலர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் விமானமும் அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com